சஜித் சார்பு சகல பாராளுமன்ற, உறுப்பினர்களுக்கும் இன்று அழைப்பு..!ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அக்கட்சியி்ன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று (24) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. 

இன்று பிற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த கலந்துரையாடலுக்கு ஐக்கிய தேசிய கட்சியில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கலந்துரையாடலில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்