ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய சார்பில், இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டது..!ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிக்கு அந்த பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இன்று -20- தேர்தல் ஆணைக்குழுவில் முன்னிலையாகி கட்டுப்பணம் செலுத்தினார். 

இந்த சந்தர்ப்பத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் சிலர் அவ்விடத்தில் கூடியிருந்தனர். 

இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாகர காரியவசம், வீ்ழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீள கட்டியெழுப்புவதற்காக கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கட்டுப்பணம் செலுத்தியதாக தெரிவித்தார். 

அதன் முதற்கட்ட நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...