முல்லைத்தீவில் குடியேற தயாராகும் ஞானசார !

முல்லைத்தீவில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் குடியேற தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கிலுள்ள பௌத்த சொத்துக்களை பாதுகாப்பதற்காக தான் முல்லைத்தீவில் குடியேற தீர்மானித்துள்ளதாக ஞானசார தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கள் அன்று நீதிமன்ற உத்தரவினை பொருட்படுத்தாமல் கொலம்பகே மேதாலங்கார தேரரின் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்திற்கு அருகில் வைத்து தகனம் செய்யப்பட்டது.

இதனால் வடமாகாணத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவில் குடியேற தயாராகும் ஞானசார ! முல்லைத்தீவில் குடியேற தயாராகும் ஞானசார ! Reviewed by NEWS on September 26, 2019 Rating: 5