ஹிஸ்புல்லாஹ்வுக்கு வாக்கு போடுவது துரோகத்தின் அடையாளமாகும் -ஹக்கீம்

கட்சி அரசியல்தான் முஸ்லிம் சமூகத்துக்கான பாதுகாப்பே தவிர தனிமனித அரசியல் இல்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

காத்தான்குடியில் இன்று (13) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற, ஜனாதிபதி தேர்தலுக்காக பிரசார நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்

 கடந்த ஏப்ரல் 21க்கு பிறகு இடம்பெற்ற சம்பவங்களைக் கருத்தில் கொண்டு அமைச்சுப் பதவிலிருந்து நீங்கி மாற்றுத்தரப்புக்கும் சர்வதேசத்துக்கும் ஒரு செய்தியை சொன்னோம்

முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பு இன்று கருத்து வேறுபாடுகளை மறந்து சமூகம் ஒற்றுமைப்படல் வேண்டும் என்றிருக்கின்ற சூழலில் அப்படியே முஸ்லிம் சமூகத்தைக் கொண்டு போய் அடகு வைக்கின்ற அநியாயம் ஆபத்தானது என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு வாக்கேனும் ஹிஸ்புல்லாவுக்கு போடுவது என்பது மிகப் பெரிய துரோகத்தின் அடையாளமாக மாறும்.

கடந்த ஏப்ரல் 21க்குப் பிறகு அவரால் வாய் திறக்க முடியாமல் போனது. அவரை இந்த இனவாதக் கும்பல் வாய் திறக்க விடவில்லை.ஆனால் அந்தக் கூட்டத்துக்கு ஒரு கூலிப்படையாக ஹிஸ்புல்லாஹ் இயங்குகின்றார் இது அப்பட்டமான துரோகத்தனமும் காட்டிக் கொடுப்புமாகும்.

அவருடைய பல்கலைக்கழக விவாகரத்திலே அவருக்கு நடந்த விவாகரங்களில் அவருக்கு எதிராக சொல்லப்பட்ட விவகாரங்களிலே முஸ்லிம் அரசியல் தலைமைகள் பக்குவம் காத்து செயற்பட்டன. அவரையும் பாதிக்காமல் சமூகத்தையும் பாதிக்காமல் நாட்டிலுள்ள இன வாதிகளுக்கு தீனி போடாமல் கையாள்வதிலே நேர்மையாக நடந்து கொண்டோம்.

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பொதுவாகவும் காத்தான்குடி மக்கள் குறிப்பாகவும் நாட்டிலுள்ள முஸ்லிம்கள் நாடுதழுவிய ரீதியிலும் இவ்வாறான பச்சோந்தித்தன அரசியலை அங்கீகரிக்க மாட்டார்கள் என்பதிலே பூரண நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றார்.
ஹிஸ்புல்லாஹ்வுக்கு வாக்கு போடுவது துரோகத்தின் அடையாளமாகும் -ஹக்கீம் ஹிஸ்புல்லாஹ்வுக்கு வாக்கு போடுவது துரோகத்தின் அடையாளமாகும் -ஹக்கீம் Reviewed by NEWS on October 14, 2019 Rating: 5