எல்பிட்டிய தேர்தல் முடிவுகளுடன் பொதுஜன பெரமுனவின் வெற்றியை கொண்டாட தயாராகுமாறு மஹிந்த அழைப்பு...!எல்பிட்டிய தேர்தல் முடிவுகளுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியை கொண்டாட தயாராகுமாறு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார்.

மாவத்தகமையில் இன்று -10- பொதுஜன பெரமுனவின் அலுவலகம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அனைத்து துறைகளிலும் நாடு வீழ்ச்சியடைந்துள்ளது. 5 ஆண்டுகளாக ஜனாதிபதி கூறியதை பிரதமர் கேட்கவில்லை. பிரதமர் செய்ய முயற்சிப்பதை ஜனாதிபதி செய்ய இடமளிப்பதில்லை.

ஜனாதிபதி நடு நிலை வகிக்க எடுத்த தீர்மானம் சிறந்தது. கட்சி என்ற வகையில் சுதந்திரக்கட்சியின் ஆதரவை கோத்தபாயவுக்கு வழங்க தீர்மானித்துள்ளனர்.

எல்பிட்டிய தேர்தல் முடிவு சிறந்ததாக இருக்கும். 16ம் திகதி கட்டாயம் கோத்தபாய ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாக வருவார் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
எல்பிட்டிய தேர்தல் முடிவுகளுடன் பொதுஜன பெரமுனவின் வெற்றியை கொண்டாட தயாராகுமாறு மஹிந்த அழைப்பு...! எல்பிட்டிய தேர்தல் முடிவுகளுடன் பொதுஜன பெரமுனவின் வெற்றியை கொண்டாட தயாராகுமாறு மஹிந்த அழைப்பு...! Reviewed by NEWS on October 11, 2019 Rating: 5