கோத்தபாய ராஜபக்ச தீயவர் அல்ல - புகழும் ரதன தேரர்

கோத்தபாய ராஜபக்ச தீயவர் அல்ல, அவர் கருணையானவரே என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும்,

இதற்கு முன்னர் நாம் யுத்தம் ஒன்றை சந்தித்தோம். கொடூரமான பயங்கரவாதிகளுடன் நாம் போரிட்டோம். அதற்கிடையில் இரு பக்கங்களிலும் சில சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம்.

எப்போதுமே இரக்கம் காட்டி யுத்தத்தை நிறைவு செய்ய முடியாது. இவ்வாறான யுத்தம் செய்த நாடுகளின் மத்தியில் மிகவும் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட நாடாக இலங்கை இருக்கின்றது.

எனினும் இறுதி யுத்தத்தில் போரிட்ட இராணுவத்தினரை துரோகிகளாக பெயரிட்டவர்களும் இருந்தனர்.

மேலும், கடந்த காலங்களில் நான் கோத்தபாய ராஜபக்ச குறித்து எந்த விமர்சனங்களையும் முன்வைக்கவில்லை. ஒட்டுமொத்த ராஜபக்சர்களின் அரசாங்கத்தையே விமர்சித்தேன்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோத்தபாயவை பிரதமராக்கி ஐதேக அரசாங்கத்தை தோற்கடிப்போம் என்றேன். மத்திய வங்கி சம்பவமே இத்றகு காரணம். கோத்தாவுடன் எனக்கு எவ்வித முரண்பாடுகளும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்