சு.க.வின் முடிவுக்கு எதிர்ப்பை வெளியிடும் அமைப்பாளர்கள் நீக்கப்படுவர் - தயாசிறி எச்சரிக்கை..!ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலர் முன்னணி ஒன்றை அமைத்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பாதுகாக்கும் இந்த முன்னணிக்கு ராஜிக கொடிதுவக்கு தலைமை வகிக்கிறார்.


இந்த முன்னணி ஸ்ரீலங்கா சுதந்திர ஜனநாயக முன்னணி என்ற பெயரில் இயங்கவுள்ளது.

இந்தநிலையில் சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காக இந்த முன்னணி புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோத்தபாய ராஜபக்சவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவளித்தமைக்கு அந்தக்கட்சியின் பெரும்பாலான தொகுதி அமைப்பாளர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதன் மொத்தமுள்ள 182 அமைப்பாளர்களில் 179 பேர் கோத்தபாயவுக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தநிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முடிவுக்கு எதிர்ப்பை வெளியிடும் அமைப்பாளர்கள் தொடர்ந்தும் அமைப்பாளர்களாக இருக்கமாட்டார்கள் என்று கட்சியின் செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
சு.க.வின் முடிவுக்கு எதிர்ப்பை வெளியிடும் அமைப்பாளர்கள் நீக்கப்படுவர் - தயாசிறி எச்சரிக்கை..!  சு.க.வின் முடிவுக்கு எதிர்ப்பை வெளியிடும் அமைப்பாளர்கள் நீக்கப்படுவர் - தயாசிறி எச்சரிக்கை..! Reviewed by NEWS on October 15, 2019 Rating: 5