எங்கு தப்பித்தாலும் கோட்டா இறுதியில் மாட்டும் இடம்..!2005 ல் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு திரும்பியபோது ஜனாதிபதித் தேர்தலுக்கு சட்டவிரோதமாக வாக்களித்ததாக கோட்டபய ராஜபக்ஷ மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க வாக்குச் சாவடியில் பணியாற்றிய அனைவரையும் வரவழைக்க குற்றவியல் புலனாய்வுத் துறை எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய 2005ம் ஆண்டில் மெதமுலன இல்லத்தில் பதியப்பட்ட வாக்களிப்பாளர்கள் வாக்களித்த வாக்கு சாவடியில் பணியாற்றிய அதிகாரிகள், கிராம சேவகர், நிலைய பொறுப்பாளர், தேர்வு அதிகாரி உள்ளிட்ட பல நபர்களை விசாரிக்கவும், இதனுடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களை பெற்று விசாரணைகளை மேற்கொள்ள CIDயினர் நீதிமாற்றத்தில் அனுமதி பெற உள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க பிரஜையாக இருந்தபோது 2005ம் ஆண்டு தேர்தல் பதிவேட்டில் அவர் மற்றும் அவரது மனைவியின் பெயர் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்டுள்ளது என ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு கோட்டாபய ராஜபக்ஷ சட்டவிரோதமாக வாக்களித்தது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

அதேபோல சமல் ராஜபக்ஷவிற்கும் சட்டத்தில் இருந்து தப்பிக்க இயலாது.
எங்கு தப்பித்தாலும் கோட்டா இறுதியில் மாட்டும் இடம்..! எங்கு தப்பித்தாலும் கோட்டா இறுதியில் மாட்டும் இடம்..! Reviewed by NEWS on October 04, 2019 Rating: 5