தன்னுடன் நேரடி விவாதத்திற்கு வருமாறு மஹிந்த ராஜபக்ஷவிற்கு மங்கள அழைப்பு..!நாட்டின் நிதி நிலவரம் தொடர்பில் தன்னுடன் நேரடி விவாதத்திற்கு வருமாறு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகள் யாவும் பயனற்றதாகவே காணப்படுகின்றது. தங்களின் அதிகாரத்தையும், ஆட்சி பெருமைகளையும் தக்கவைத்துக் கொள்வதற்காகவே பாரிய தேசிய நிதி செலவிடப்பட்டு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த அபிவிருத்திகள் ஏதும் தேசிய வருமானத்தை ஈட்டும் விதமாக அமையவில்லை என்றும் அவர் சுட்டிகாட்டினார்.

நல்லாட்சி அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ள அரச முறை கடன்கள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் மங்கள சமரவீர கடந்த வாரம் வெளியிட்ட ஊடக அறிக்கை தொடர்பில் தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நிதியமைச்சில் இடம் பெற்றது. 

இதன் போது கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

(இராஜதுரை ஹஷான்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்