முன்னாள் அமைச்சர்கள் இருவர் சஜித்துடன் சங்கமம்..!

ஶ்ரீரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதற்காக இன்று (02) அவருடன் சங்கமித்தார்.

அத்துடன், முன்னாள் பிரதியமைச்சர் டபிள்யூ. பி. ஏக்கநாயக்கவும் சஜித்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

கட்சியிலிருந்து வெளியேறிய உறுப்பினர்களை மீண்டும் கட்சியில் இணையுமாறு சஜித் பிரேமதாச விடுத்த அழைப்பின் பேரிலேயே தான் இணைந்ததாக ஏக்கநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக அரசியல் பயணத்தை ஆரம்பித்த ஏக்கநாயக்க அக்கட்சியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சுதந்திரக்கட்சிக்கு ஆதரவு வழங்கினார். இந்நிலையிலேயே தற்போது மீண்டும் தாய்வீடு திரும்பியுள்ளார்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்