கோட்டாபய – ஸ்ரீ ல.சு.க. இடையே விசேட சந்திப்பு இன்று..!
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (14) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 19ஆம் திகதி ஸ்ரீ ல.பொ.பெ. ஜனாதிபதி வேட்பாளருடன் கைச்சாத்திடவுள்ள 17 அம்ச உடன்படிக்கை குறித்தே இந்த கலந்துரையாடல் இடம்பெறுவதாகவும் கூறப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு சுதந்திரகட்சி ஆரவளிப்பதாக தீர்மானம் எடுத்து அறிவித்துள்ள நிலையில் சுதந்திரக்கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் கட்சி ரீதியான ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்தானது. இதில் இரு கட்சிகளினதும் செயலாளர்கள் கைச்சாத்திட்டிருந்தனர்.

இந்நிலையில் 17விடயங்களை உள்ளடக்கிய மற்றுமொரு ஒப்பந்தம் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபயவுக்கும், சுதந்திரக்கட்சிக்கும் இடையில் கைத்திடப்படவுள்ளது. இந்த ஒப்பந்தத்திலுள்ள விடயங்களை இறுதி செய்வதற்கான கலந்துரையாடலே இன்று இருதரப்பின் கட்சிப்பிரதிநிதிகளுடன் இடம்பெறவுள்ளது.
கோட்டாபய – ஸ்ரீ ல.சு.க. இடையே விசேட சந்திப்பு இன்று..!  கோட்டாபய – ஸ்ரீ ல.சு.க. இடையே விசேட சந்திப்பு இன்று..! Reviewed by NEWS on October 14, 2019 Rating: 5