முஸ்லிம் மக்கள் கோட்டாபயவுக்கு வாக்களிக்க வேண்டும் : மஹிந்தானந்த

பிரிவினைவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் மக்களும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் வைத்து இன்று (15) இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

கோட்டாபய ராஜபக்ஷ முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பை வெகுவாக எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் முஸ்லிம் இன ஜனாதிபதி சட்டத்தரணிகள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்கள் எனவும் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...