கோட்டாவுக்கு நடக்கப்போவது என்ன ? தீர்ப்பு இன்று

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை சற்றுமுன் ஆரம்பமாகியது.

மேன்முறையீட்டு தலைமை நீதிபதி யசன்த கோதாகொட, அர்ஜுன ஒபேசேகர மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த மனு நேற்று(03) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

குறித்த மனு தொடர்பான விசாரணைகள் நேற்று(03) மதியம் 1.30 முதல் மாலை 6.15 மணி வரையில் இடம்பெற்றதுடன் மேலதிக விசாரணைகள் இன்று காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோட்டாவுக்கு நடக்கப்போவது என்ன ? தீர்ப்பு இன்று கோட்டாவுக்கு நடக்கப்போவது என்ன ? தீர்ப்பு இன்று Reviewed by NEWS on October 04, 2019 Rating: 5