சந்திரிகாவின் கடிதத்துக்கு தயாசிறி பதில்..!ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் போன்று முற்போக்கு மற்றும் ஜனநாயக கொள்கையை பின்பற்றுவதனால்தான் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்க தீர்மானம் எடுத்ததாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்க கட்சி எடுத்த தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு அனுப்பியிருந்த கடிதத்துக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கையினைப் பாதுகாப்பதற்காக தாம் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், கொள்கையை தாறைவார்க்காமல் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானம் எடுத்ததாகவும் அவர் பதில் கடிதத்தில் மேலும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்