கோரிக்கைக்கு ஆப்பு : இராணுவ முகாம் அகற்றப்படாது

வடக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படாது என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜனரால் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் கண்டி தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் தினங்களில் அசாதாரணமான முறையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களை விடுதலை செய்யும் நடைமுறைகள் முன்னெடுக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...