அலரி மாளிகையில் சிக்கியது சிலரின் பைல்கள் - ரணிலின் திட்டமா?

சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான தகவல்கள் அடங்கிய கோப்புகள் தொகுதியொன்று அலரிமாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான தகவலை ஆங்கிலப் பத்திரிகையொன்றை மேற்கோள்காட்டி சகோதர மொழி ஊடகமொன்று அறிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகையிலிருந்து வெளியேறிச் சென்றதன் பின்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கடந்த வாரம் அலரிமாளிகைக்கு வருகை தந்துள்ளார். இதன்போதே இந்த கோப்புகள் தொகுதியொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த கோப்புகள் தொகுதி தவறுதலாக வைக்கப்பட்டுச் சென்ற ஒன்றா? அல்லது திட்டமிட்டு வைத்துச் சென்றதா? என்பது குறித்து சந்தேகம் நிலவுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த கோப்புகளில் காணப்படும் தகவல்களின் உண்மைத் தன்மைகள் தொடர்பில் சந்தேகம் இல்லையெனவும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...