பிரதான செய்திகள்

என் அரசியல் வாழ்க்கையை உச்சத்துக்கு கொண்டு சென்றவர்கள் ஊடகவியலாளர்களும், ஊடக நிறுவனமுமே..!


-பைஷல் இஸ்மாயில்-

கல்முனை மாநகர முதல்வராக இருந்த காலங்கங்களில் என்னால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகள் போன்றவற்றையும், மக்களுக்கு நான் கூறவருகின்ற விடயங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு சென்று என்னை உச்சத்துக்கு கொண்டு சென்ற ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன் என்று கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும் மெட்ரோ பொலிடன் கல்லுரியின் தவிசாளருமான கலாநிதி சிறாஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.

தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம் (நுஜா) அமைப்பினருக்கும், அவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றிரவு (20) சாய்ந்தமருது அவரது இல்லத்தில் இடம்பெற்றது. அந்த சந்திப்பன்போது அவர் கூறுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஊடகவியலாளர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் தங்களின் ஊடகப் பணியினை மிகச் சிறப்பாக செய்து வருகின்றார்கள். அவர்களின் கஷ்டங்களையும், துன்பங்களையும் நான் நன்கறிவேன். அவர்களுக்கு எவ்வாறான உதவிகள் எச்சந்தர்ப்பத்தில் தேவைப்பட்டாலும் அதை நிவர்த்தி செய்துகொடுக்க என்னால் இயன்றளவு செய்துகொடுத்துள்ளேன். செய்து கொடுக்கவும் தயாராக இருக்கின்றேன். ஊடகவியலாளர்களை எனது தேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்திவிட்டு அவர்களை கண்டும் காணதவர்போன்று கழட்டி விட்டுச் செல்கின்றவன் நான் அல்ல என்பதை என்னுடன் உறவு வைத்திருக்கின்ற சகல ஊடகவியலாளர்களும் அறிவார்கள்.

அதுமாத்திரமல்ல, எனது அரசியல் பயணத்திலும் கூட, நான் ஒருபோதும் அவ்வாறு நடந்தது கிடையாது. அதில் ஏதாவது முறன்பாடுகள் அல்லது தடைகள் ஏற்பட்டால் அதற்கான தீர்வுகளைக்காண முயற்சிப்பேன். அவ்வாறு தீர்வு கிடைக்காவிட்டால் நான் இருக்கின்ற கட்சியின் தலைமையிடம் நேருக்கு நேராக மிக நேர்மையான முறையில் சொல்லிவிட்டு எனது இராஜினமா கடிதத்தை கொடுத்து முசாபாச் செய்துவிட்டு சந்தோஷமா விழகிச் செல்வேனே தவிற, அதில் இருந்துகொண்டு கள்ளத்தனமான அரசியல் பயணத்தையோ அல்லது வேறு தொடர்புகளையோ நான் ஒருபோதும் வைத்துக்கொள்ளமாட்டேன்.

கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்துகொண்டு எனது அரசியல் பயணத்தை முன்னெடுத்தபோது அதில் எனக்கு ஏற்பட்ட தடைகளைப்பற்றி அந்தக் கட்சித் தலைமையிடம் எடுத்துக்கூறி அதற்கு தீர்வுகாண முயற்சித்தேன். அவ்வாறு முயற்சித்தும் அதற்கு சரியான தீர்வு எனக்கு கிடைக்கவில்லை. தீர்வு கிடைக்கவில்லை என்பதற்காக அக்கட்சியில் இருந்துகொண்டு கள்ளத்தனமான இருவேட அரசியல் பயணத்தை தொடர்ந்திருக்கலாம். அப்படிப்பட்ட இருவேட அரசியல் பயணத்தை என்னால் ஒருபோதும் தொடரமுடியாது. ஏனென்றால், எனது சிறு வயது கல்விப் பருவத்திலிருந்து இந்தப் பழக்கம் இருந்துகொண்டு வருகின்றது. 

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவுப் ஹக்கீமிடம் நேராகச் சென்று எனது இராஜினமா கடிதத்தை கொடுத்துவிட்டு அவருடன் முசாபாச் செய்துவிட்டு மிகச் சந்தோஷமான முறையில் அந்தக் கட்சியிலிருந்து விலகி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைமையுடன் மிக நேர்மையாக எனது அரசியல் பயணத்தை முன்னெடுத்து அதன் மூலம் எமது மக்களுக்கு பல்வேறுபட்ட வாழ்வாதார உதவிகளைச் செய்து வருகின்றேன் என்றார்.

இந்த சந்திப்பில் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ், செயலாளர் பைஷல் இஸ்மாயில், ஒன்றியத்தின் பிரதித் தலைவர்களான எம்.எச்.எம்.கியாஸ், அபுபக்கர் மற்றும் ஆசிரிய ஆலோசகரும், எழுத்தாளருமான எஸ்.எல்.மன்சூர் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் ஆகியோரினால் இவ்வாண்டின் சங்க செயற்பாடுகள் பற்றியும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தனர்.

அதற்கான சகல உதவி ஒத்தாசைகளை தன்னால் இயன்றளவு செய்து தருவதாக கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும் மெட்ரோ பொலிடன் கல்லுரியின் தவிசாளருமான கலாநிதி சிறாஸ் மீராசாஹிப் இதன்போது வாக்குறுதியளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
News
News

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget