பிரதான செய்திகள்

கப்பம் கடத்தலில் ஈடுபட்ட கருணா அம்பாறைக்கு வந்து நீலிக்கண்ணீர் வடிக்க தேவையில்லை..!
- பாறுக் ஷிஹான் -

கப்பம் பெறுதல் கடத்தலில் ஈடுபட்ட கருணா அம்பாறைக்கு வந்து நீலிக்கண்ணீர் வடிக்க தேவையில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

மல்வத்தை அப்பிள் சமூக மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேசத்திற்குட்பட்ட வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(22) நண்பகல் மல்வத்தை விபுலானந்ததா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இதன் போது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தனது கருத்தில்

கருணா அம்பாறை மாவட்டத்திற்கு வருவதன் நோக்கமென்ன அதற்கான காரணம் என்ன தமிழர்களின் வாக்குகளை பிரிக்கவேண்டும் அம்பாறை மாவட்டத்திற்கு கிடைக்கின்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கத்திற்காகத் தான் இங்கே களமிறங்கியிருக்கிறார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை எடுத்துக் கொள்ளுங்கள் நான் அவருக்கு அமைச்சர் பதவியை எடுத்துக் கொடுக்கிறேன் என்று கூறுகிறார். அவருடைய மாவட்டத்தில் இருக்கின்ற வியாழேந்திரனுக்கு முதலில் அமைச்சர் பதவி எடுத்து கொடுக்கட்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரனுக்கு அமைச்சுப்பதவி எடுத்துக்கொடுக்க வக்கற்றவர் விநாயகமூர்த்தி முரளிதரன் .இங்கு அம்பாறை மாவட்டத்தில் வந்து அமைச்சுப்பதவி எடுத்து கொடுக்க போகின்றாரா ?. 

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அமைச்சுப் பதவியிலிருந்து கருணா ஒருபோதும் அம்பாறை மாவட்டத்திற்கு வந்ததும் இல்லை.அம்பாறை மாவட்டத்தில் எந்தவித அபிவிருத்தி வேலைகளை செய்ததும் இல்லை. யாருக்கும் வேலை வாய்ப்பு பெற்று கொடுத்ததும் இல்லை. இப்போது நீலிக்கண்ணீர் வடித்து உள்நுழைகின்ற என்ற வேலைப்பாட்டை செய்து வருகின்றார்.

முன்னாள் போராளிகளை ஒன்றிணைத்து புனர்வாழ்வு பெற்றுக்கொடுத்து உதவி அளிக்க போகின்றார் என்று கூறியிருந்தார். தான் அமைச்சுப் பதவியில் இருக்கும் போதும் முன்னாள் போராளிகள் தவிக்கவிட்டவர் கருணா . கடத்தல் கப்பங்களில் ஈடுபட்டவர்.
எங்களது பிள்ளைகளை கடத்திப் வற்புறுத்தல் செய்தவர் போராட்டங்களில் நடத்துவதற்காக சிறு பிள்ளைகளை கடத்திச் சென்றவர். இன்று அம்பாறை மாவட்டத்தில் எமது இளைஞர்களை யுவதிகளை மாற்றப்போகுகின்றாரா?

கொலைகாரனுக்கும்.கொள்ளைக்காரனுக்கும் இரவிலே பாட்டும்இநடனமும் பகலில் கூத்தும் கும்மாளமும் அடிக்கின்றவர் எங்களது அம்பாறை மாவட்டத்தை பாதுகாக்கப் போகிறாரா? முதலில் மட்டக்களப்பு மாவட்டத்தை பாதுகாக்கட்டும் அம்பாறை மாவட்டதிற்கு வரட்டும் அம்பாறை மக்கள் தமிழிலும் இதமிழ் தேசியத்திலும் பற்றுறுதி கொண்டவர்கள் . வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் மக்கள் ஒன்றாக வாக்களித்து இரண்டு பிரதிநிதிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைப்பார்கள் என தெரிவித்தார்.

இந்த நிகழ்விற்கு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில்,சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் வெ.ஜெயச்சந்திரன்,இலங்கை தமிழரசு கட்சியின் வாலிப முன்னணியின் துணை செயலாளர் அ.நிதான்சன்,மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலய அதிபர் திருமதி ஜி.கணேஸ்வரன் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
News
News

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget