ரஞ்சன் ராமநாயக்காவுக்கு 29 ஆம் திகதி வரை விளக்கமறியல் ..!பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்க நேற்று (14) மாலை 6.15 அளவில் மாதிவல பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் அவர் கொழும்பு குற்றதடுப்பு பிரிவுக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நுகேகொட நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவிற்கு அமையவே ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிபதிகளின் நடவடிக்கைகளில் தலையிட்டமை மற்றும் அச்சுறுத்திய குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரின் உத்தரவிற்கு அமையவே ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்காவுக்கு 29 ஆம் திகதி வரை விளக்கமறியல் ..! ரஞ்சன் ராமநாயக்காவுக்கு 29 ஆம் திகதி வரை விளக்கமறியல் ..! Reviewed by NEWS on January 15, 2020 Rating: 5