வைத்தியர் ஷாபி மீண்டும் வைத்தியத் தொழிலை செய்ய சுகாதார அமைச்சு பரிந்துறை..!


குருநாகல் பொது மருத்துவமனையில் மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் முகமது ஷாபிக்கு மீண்டும் அவரது வைத்திய தொழிலை வழங்குமாறு அரச சேவை ஆணையம் சுகாதார அமைச்சகத்திற்கு பணிந்துரை செய்துள்ளது .

கருத்தடை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இந்த மருத்துவரின் சேவைகளை நிறுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது . இந்த வழக்கு குருநாகல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவர் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட நீதிமன்ற அறிக்கைகள் மற்றும் சுகாதார அமைச்சின் விசாரணை அறிக்கைகளின் அடிப்படையில் இந்த மருத்துவரை மீண்டும் நியமிக்க பரிந்துரைகளை சுகாதார அமைச்சு வழங்கவுள்ளதாக அருண செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...