கனடாவைச் சேர்ந்த பிரபலம் ப்ளாக்கரான ரோசி கேப்ரியல் இஸ்லாதை ஏற்றுக்கொண்டார் ..!கனடாவை சேர்ந்த பிரபல வீடியோ ப்ளாக்கரான ரோசி கேப்ரியல் தான் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுவிட்டதாக அறிவித்திருக்கிறார். ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாக்ராமில் இவருடைய அறிவிப்பு பதிவு ஆயிரக்கணக்கில் லைக்குகளையும், ஷேர்களையும் குவித்து வருகிறது. 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பின்னணியில் இஸ்லாமை ஏற்பார்கள். பயணம் செய்வதில் அலாதியான விருப்பம் கொண்ட இவர் கடந்த பத்து வருடங்களாக பாகிஸ்தானில் பல்வேறு இடங்களுக்கும் சென்று மக்களுடனான அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். 

தனியாக பயணம் மேற்கொள்ளும் தன்னிடம் பாகிஸ்தானியர்கள் காட்டிய அன்பும் மரியாதையும், பாதுகாப்பு உணர்வும் தன்னை இஸ்லாம் நோக்கி அழைத்து வந்ததாக கூறுகிறார். 

இஸ்லாம் நோக்கிய தன்னுடைய ஆய்வில் மிகுந்த மன அமைதியை பெற்றதாகவும், தற்பொழுது தான் அறிவித்திருக்கிறேனே ஒழிய, தான் மனதளவில் எப்போதோ முஸ்லிமாகி விட்டதாகவும் குறிப்பிடுகிறார் ரோசி.
கனடாவைச் சேர்ந்த பிரபலம் ப்ளாக்கரான ரோசி கேப்ரியல் இஸ்லாதை ஏற்றுக்கொண்டார் ..! கனடாவைச் சேர்ந்த பிரபலம் ப்ளாக்கரான ரோசி கேப்ரியல் இஸ்லாதை  ஏற்றுக்கொண்டார் ..! Reviewed by NEWS on January 11, 2020 Rating: 5