டாக்டர் ஷாபியை மீண்டும் சேவைக்கு அமர்த்தும் முடிவை மீள்பரிசீலனை செய்யக் கோருகிறார் ஜனாதிபதி கோட்டாபய ..!


டாக்டர் ஷாபியை மீண்டும் சேவையில் அமர்த்த அரச சேவைகள் ஆணைக்குழுவின் முடிவை மீள்பரிசீலனை செய்யக் கோருகிறார் ஜனாதிபதி !

குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று மருத்துவர் டாக்டர் மொஹம்மட் ஷாபியை மீண்டும் சேவையில் அமர்த்த நடவடிக்கைளை எடுத்துவரும் அரச சேவைகள் ஆணைக்குழு, அவர் தொடர்பில் உரிய பரிந்துரைகளை தருமாறு சுகாதார அமைச்சைக் கேட்டுள்ளது.

அதேசமயம் மகப்பேற்று விவகாரங்களால் சர்ச்சையில் சிக்கிய டாக்டர் ஷாபி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இந்த விடயத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரச சேவைகள் ஆணைக்குழுவிடம் கேட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

மகப்பேற்று சர்ச்சையில் சிக்கிய சந்தேகநபரான ஷாபி மீண்டும் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட அரச சேவைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் பல்வேறு மட்டத்தில் உள்ள பௌத்த பிக்குமார் அதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...