ஈரான் - அமெரிக்க மோதல் யாழ்ப்பாணத்தில் எதிரொலி...!


யாழ்ப்பாணத்தில் எரிபொருள் பற்றி பதற்றம்.

அமெரிக்க - ஈரான் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு ஏற்படலாம் என்பதால் யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்று எரிபொருள் நிரப்பி செல்லும் வாகன சாரதிகள்.

கடந்த ஆட்சியில் பெற்றோலிய கூட்டுத்தான ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட போது இவ்வாறு வரிசையாக நின்று எரிபொருள் நிரப்பி நிலையில் தற்போது அமெரிக்க - ஈரான் போர் பதற்றம் நிலவும் நிலையில் மீண்டும் எரிபொருள் நிரப்ப வரிசை.

இதேவேளை எரிபொருளை பதுக்கிவைப்போர் குறித்து அரசாங்கத்துக்கு முறைப்பாடுகளை வழங்குவதாகவும் பலர் தெரிவித்துள்ளார்கள்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...