பாலித்த ரங்கே பண்டாரவின் மகனுக்கு 32, 500 ரூபா அபராதம்; சாரதி அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக ரத்து!

ADMIN
0 minute read
0

சிலாபம் பங்கதெனிய பிரதேசத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தொன்றை ஏற்பட்டுத்திய குற்றத்துக்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்க பண்டாரவின் மகனான யஷோத பண்டாரவுக்கு 32, 500 ரூபா அபராதம் விதித்து சிலாபம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தையும் ஆறு மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து ‍செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அபராத தொகையை செலுத்தாவிடின் ஆறு மாத சிறைத் தண்டனை அனுப்பவிக்க வேண்டும் என்று நீதிவான் தனது தீர்ப்பில் அறிவித்தார்.
To Top