பெரிய வெங்காயத்திற்கு விலை நிர்ணயம்.


இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு நாளை (23) முதல் அமுலாகும் வகையில் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் அதிகபட்ச சில்லறை விலை 190 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

சந்தையில் கடந்த நாட்களில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
பெரிய வெங்காயத்திற்கு விலை நிர்ணயம். பெரிய வெங்காயத்திற்கு  விலை நிர்ணயம். Reviewed by ADMIN on February 22, 2020 Rating: 5