அன்சார் ஹோட்டல் படுகொலை விவகாரம் 18 வயது நபர் ஒருவர் கைது. போலீசார் அறிவிப்பு.நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியில் அமைந்துள்ள அன்சார் ஹோட்டல் என்ற உணவகம் ஒன்றில்

நேற்று இரவு ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்த நிலையில் இன்றைய தினம் ஒருவரை கைது செய்துள்ளதாக போலீசார் சற்றுமுன் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் 18 வயதுடைய, பெரியமுல்ல பகுதியில் வாசித்து வரும் ஒருவர் எனவும் இன்றைய தினம் குறிப்பிட்ட நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஹோட்டல் பணியாளர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கெக்கிராவ பகுதியை சேர்ந்த அஸீஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். 
அன்சார் ஹோட்டல் படுகொலை விவகாரம் 18 வயது நபர் ஒருவர் கைது. போலீசார் அறிவிப்பு. அன்சார் ஹோட்டல் படுகொலை விவகாரம் 18 வயது நபர் ஒருவர் கைது. போலீசார் அறிவிப்பு. Reviewed by ADMIN on March 10, 2020 Rating: 5