கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து உடனடியாக அறிவியுங்கள் : விமல்


கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்கள் எதிர்க் கொண்டுள்ள நெருக்கடி நிலைமையினை கைத்தொழில் அமைச்சுக்கு அறிவிக்க அவசர தொலைப்பேசி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மும்மொழிகளிலும் சேவையினை கைத்தொழிலாளர்கள் துரிமதாக பெற்றுக் கொள்ள முடியும். என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
மூலப் பொருளை பெற்றுக் கொள்வதில் நெருக்கடியினை எதிர்க் கொண்டுள்ள உள்ளுர் கைத்தொழிலாளர்கள் கைத்தொழில் நடவடிக்கைகளில் ஈடுப்படுவதில் பல சிரமங்களை எதிர்க் கொண்டுள்ளார்கள்.
ஆகவே இவர்களின் நலன் கருதி அரசாங்கம் விசேட திட்டங்களை செயற்படுத்தியுள்ளது.

இதற்காக 011. 3144416 என்ற தொலைப்பேசி சேவை அறிமுகம் செய்யபட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து உடனடியாக அறிவியுங்கள் : விமல் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து உடனடியாக அறிவியுங்கள் : விமல் Reviewed by ADMIN on March 13, 2020 Rating: 5