தவிசாளர் முஜாஹிரின் தலைமையில் மன்னாரில் கொரோணா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆரம்பம்!


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் முஜாஹிரின் தலைமையில், கொரோணா வைரஸ் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மன்னாரில் இன்று (25) ஆரம்பிக்கப்பட்டன. 

கொரோணா வைரஸின் தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 

அந்தவகையில், ரமணன் (Technical Officer ) தலைமையில், தவிசாளர் முஜாஹிரின் பங்களிப்பில், மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களிலும், சன நெரிசல் மிக்க பகுதிகளிலும் கொரோணா வைரஸின் தாக்கம் ஏற்படாதிருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான துப்புரவு செய்தல், மருந்து தெளிப்பு மற்றும் மக்களுக்கு விழிப்பூட்டும் நடவடிக்கைகள் போன்ற இன்னோரென்ன வேலைத்திட்டங்கள் இன்று இடம்பெற்றன. 

இதன்போது, தவிசாளர் முஜாஹிர், ரமணன் (TO), பிரதேச சபை உறுப்பினர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

 
தவிசாளர் முஜாஹிரின் தலைமையில் மன்னாரில் கொரோணா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆரம்பம்!  தவிசாளர் முஜாஹிரின் தலைமையில் மன்னாரில் கொரோணா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆரம்பம்! Reviewed by ADMIN on March 28, 2020 Rating: 5