டிப்பர் வாகனமும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயம்.


சேருவில மூதூர் பிரதான வீதியில் டிப்பர் வாகனமொன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சூரியபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று(16) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவோர் கந்தளாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாயில் இருந்து சேருநுவர பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டியும், மணல் ஏற்றுவதற்காக சென்ற டிப்பர் வாகனமுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
டிப்பர் வாகனமும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயம். டிப்பர் வாகனமும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயம். Reviewed by ADMIN on March 16, 2020 Rating: 5