கொரோனா வைரஸ்: ஈரான் பிரஜை பதுளை வைத்தியசாலையில்..


கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் ஈரான் நாட்டு பிரஜையொருவர், பதுளையிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை, 36 வயது மதிக்கத்தக்க ஈரான் நாட்டு பிரஜை ஒருவரே இவ்வாறு அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் குறித்த நபருக்கு, மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பின் கீழ் விசேட சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக அந்த வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவரது குருதி மாதிரி, பொரளை வைத்திய ஆய்வு நிறுவகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானில் இந்த கொரோனா வைரஸ் தொற்றால் 4 ஆயிரத்து 747 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 124 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ்: ஈரான் பிரஜை பதுளை வைத்தியசாலையில்.. கொரோனா வைரஸ்: ஈரான் பிரஜை பதுளை வைத்தியசாலையில்.. Reviewed by ADMIN on March 07, 2020 Rating: 5