எனது பெயரால் போலியான தகவல் உலா வருகிறது : முஸ்லிம்களிடம் என்னை இனவாதியாக சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள்.


எனது உடம்பில் பிரேமதாசாவின் இரத்தமே ஓடுகிறது. இனவாத இரத்தம் ஓடவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.


முஸ்லிம்கள் ஊரடங்குச் சட்டத்தை மதிப்பதில்லை என்ற இனவாத பொருள்பட சஜித் பிரேமதாசா கருத்துக்களை பகிர்ந்ததாக வெளியாகிய தகவல்கள் தொடர்பில், அவருடன் தொடர்பு கொண்டு உரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


மேலும் அவர் தெரிவித்ததவது,


நான் இனவாதியல்ல. குறுகிய நோக்குடன் சிலர் இனவாதப் பிரச்சாரத்தை இவ்வாறு பரவச் செய்கின்றனர். எந்த வேளையிலும் இவ்வாறான ஓர் கருத்தை நான் தெரிவிக்கவேயில்லை. நான் அப்படிப்பட்டவன் அல்ல.


எனது உடம்பில் ஓடுவது பிரேமதாசாவின் இரத்தம் இந்த உடம்பில் இனவாத இரத்தம் ஓடாது.


எனது கட்சியில் றிசாத் பதியுதீனை இணைக்க வேண்டாமென வலியுறுத்தினர். அவர் எனது கட்சியில் போட்டியிடுகிறார்.


ஆசாத் சாலிக்கு தேசியப் பட்டியல் வழங்க வேண்டாமென்றனர். அவருக்கு எமது தேசியப் பட்டியலில் இடம் வழங்கியுள்ளது.


சகல மாவட்டங்களிலும் எமது கட்சி முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இப்படியிருக்க நான் எப்படி முஸ்லிம்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பேன்.


எனவே இதுபோன்ற தவறான தகவல்களை நம்ப வேண்டாமென்று நான் ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களிடம் கேட்டுக் கொள்கிறேன் எனவும் சஜித் பிரேதமதாசா மேலும் தெரிவித்தார்.
எனது பெயரால் போலியான தகவல் உலா வருகிறது : முஸ்லிம்களிடம் என்னை இனவாதியாக சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள். எனது பெயரால் போலியான தகவல் உலா வருகிறது : முஸ்லிம்களிடம் என்னை இனவாதியாக சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள். Reviewed by ADMIN on March 22, 2020 Rating: 5