ஜன பலவேகயவின் தேர்தல் சின்னம் வௌியீடு


சமகி ஜனபல வேகயவின் (ஐக்கிய மக்கள் சக்தி) தேர்தல் சின்னம் அதன் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பத்தரமுல்லையில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் வௌியிடப்பட்டது.

அதன்படி, சமகி ஜனபல வேகயவின் சின்னமாக தொலைப்பேசி சின்னம் சஜித் பிரேமதாசவால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன்போது, சமகி ஜனபல வேகயவின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திர கட்சி, சமகி ஜனபல வேகயவுடன் கூட்டணி அமைக்கும் ஒப்பந்தம் கைச்சாத்தானது.
ஜன பலவேகயவின் தேர்தல் சின்னம் வௌியீடு ஜன பலவேகயவின் தேர்தல் சின்னம் வௌியீடு Reviewed by ADMIN on March 13, 2020 Rating: 5