ரவூப் ஹகீமின் அதிரடி முடிவு :கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார் ஷாபி ரஹீம்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கம்பஹா மாவட்ட உறுப்பினரும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான ஷாபி ரஹீம், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் தீர்மானத்திற்கு மாற்றமாக நடந்துகொண்ட குற்றச்சாட்டுக்கமையவே அவர் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், கட்சியின் யாப்பின்படி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை நீகியுள்ளார்.

அத்துடன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் உயர்பீட உறுப்பினர் பதவியிலிருந்தும் ஷாபி ரஹீம் அவர் இடைநிறுத்தியுள்ளார்.

இந்நிலையில் கட்சியின் உயர்பீடத்தின் தீர்மானத்திற்கு மாற்றமாக அவரது நடவடிக்கை அமைந்துள்ளதால் இதுகுறித்து அவரிடம் விளக்கம் கோரப்படுவதுடன், ஏனைய ஒழுக்காற்று நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஷாபி ரஹீம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் யானைச் சின்னத்தில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவில் கைச்சாத்திட்ட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது
ரவூப் ஹகீமின் அதிரடி முடிவு :கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார் ஷாபி ரஹீம்  ரவூப் ஹகீமின் அதிரடி முடிவு :கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார் ஷாபி ரஹீம் Reviewed by ADMIN on March 23, 2020 Rating: 5