ஈஸ்டர் ஆராதனைகள் இல்லை - மல்கம் ரஞ்சித் முடிவு..கொரோனா வைரஸ் தொற்று நிலை காரணமாக உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.


அதன்படி, கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் திங்கள், வியாழன், பெரியவெள்ளி, அல்லேலூயா சனி மற்றும் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் இடம்பெறவிருந்த ஆராதனைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளன.


"இந்த ஆண்டு ஈஸ்டர் திருப்பலியானது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈஸ்டர் ஆராதனைகள் இல்லை - மல்கம் ரஞ்சித் முடிவு.. ஈஸ்டர் ஆராதனைகள் இல்லை - மல்கம் ரஞ்சித் முடிவு.. Reviewed by ADMIN on March 30, 2020 Rating: 5