சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய 17 வயது மாணவன் பிணையில் விடுதலை.சிறுமி ஒருவரை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 17 வயது மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போதைய அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு ஊர்காவற்றுறை நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டையைச் சேர்ந்த தொழில்நுட்பக் கல்லூரியில் கற்கை நெறியைத் தொடரும் மாணவன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

காரைநகரைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவியை உல்லாசக் கடற்கரை ஒன்றுக்கு அழைத்துச் சென்று மாணவன் வன்புணர்வுக்குட்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த மாத முற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மாணவியால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.

அதற்கு அமைய வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயதுடை மாணவன் இன்று ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் ஊர்காவற்றுறை நீதிவான் முன்னிலையில் இன்று நண்பகல் முற்படுத்தப்பட்டார்.

நாட்டின் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு மாணவனை பிணையில் விடுவித்து நீதிவான் கட்டளையிட்டார்.-யாழ். நிருபர் பிரதீபன்-
சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய 17 வயது மாணவன் பிணையில் விடுதலை. சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய 17 வயது மாணவன் பிணையில் விடுதலை. Reviewed by ADMIN on April 10, 2020 Rating: 5