நாளை 18 மணித்தியால நீர்வெட்டு...!கொழும்பின் பல பகுதிகளில் நாளைய தினம் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய நாளைய தினம் பிற்பகல் 1 மணிமுதல் 18 மணித்தியால நீர்வெட்டு அமுலாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கொழும்பு 13 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் நடைபெறும் என்பதோடு நவகம்புர பகுதிக்கும் நீர்வெட்டு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கீழ் நீர் குழாய்களில் காணப்படும் திருத்தப்பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை 18 மணித்தியால நீர்வெட்டு...! நாளை 18 மணித்தியால நீர்வெட்டு...! Reviewed by ADMIN on April 08, 2020 Rating: 5