மதுபான சாலையை உடைத்து 5 இலட்சம் பெறுமதியான மதுபான போத்தல்கள் கொள்ளைஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள வேளையில் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா நகர பகுதியில் உள்ள மதுபான சாலை ஒன்று இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டு 5 இலட்சம் பெறுமதியான மதுபான போத்தல்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று(03) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர் .

இன்று அதிகாலை சாஞ்சிமலை ஹட்டன் பிரதான வீதியில் வீதியின் புளியாவத்தை நகரில் உள்ள மதுபான சாலையின் முன் கதவு திறக்கப்பட்டு இருந்த பகுதியை சேர்ந்த நபர் மதுபானசாலை உரிமையாளருக்கு அறிவித்ததை அடுத்து உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.-மலையக நிருபர் சதீஸ்குமார்-
மதுபான சாலையை உடைத்து 5 இலட்சம் பெறுமதியான மதுபான போத்தல்கள் கொள்ளை  மதுபான சாலையை உடைத்து 5 இலட்சம் பெறுமதியான மதுபான போத்தல்கள் கொள்ளை Reviewed by ADMIN on April 03, 2020 Rating: 5