சந்தேகத்துக்குரிய பெண் கைது! நடந்தது என்ன?


கிருலபன பகுதியிலிருந்து தங்கல்லைக்கு சென்றதாகக் கருதப்படும் 35 வயது பெண்ணொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஐந்து நாட்களுக்கு முன்னதாக பொருட்கள் ஏற்றி வந்த வாகனம் ஒன்றில் தங்கல்ல சென்றுள்ள குறித்த பெண் அப்பகுதியில் சநதேகத்துக்குரிய வகையில் நடமாடி வந்த நிலையில் இன்றைய தினம் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்றுள்ளதா என்பதையறிய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்குரிய பெண் கைது! நடந்தது என்ன? சந்தேகத்துக்குரிய பெண் கைது!  நடந்தது என்ன? Reviewed by ADMIN on April 11, 2020 Rating: 5