சாம்பலையாவது அடக்க அனுமதியுங்கள்: ரிஸ்வி முப்தியின் இறுதி கோரிக்கை..


கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழப்பவர்களை எரிப்பதொன்றே தீர்வெனும் இலங்கை அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லையென்பதால் தகனம் செய்யப்பட்ட பின்னர் சாம்பலையாவது அடக்கம் செய்வதற்குத் தர வேண்டும் என்ற கோரிக்கை அரசிடம் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவர் ரிஸ்வி முப்தி.

உடலத்தைத் தகனம் செய்த பின் சாம்பலை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தந்தால் அதனை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ள அதேவேளை அதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றால் நாட்டின் சட்ட விதிகளை மதித்து முஸ்லிம்கள் அமைதியான முறையில் அதில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

எனினும், இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இதுவரை உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை
சாம்பலையாவது அடக்க அனுமதியுங்கள்: ரிஸ்வி முப்தியின் இறுதி கோரிக்கை.. சாம்பலையாவது அடக்க அனுமதியுங்கள்: ரிஸ்வி முப்தியின் இறுதி கோரிக்கை.. Reviewed by ADMIN on April 05, 2020 Rating: 5