கர்ப்பிணித் தாய்மாருக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள அவசர வேண்டுகோள்.


( மினுவாங்கொடை நிருபர் )


நாட்டில் பரவிவரும் கொரோனா தொற்றைக் கருத்திற்கொண்டு, நாட்டிலுள்ள கர்ப்பிணித் தாய்மாருக்கான மாதாந்தப் பரிசோதனை நடவடிக்கைகளுக்கு வரையரை விதிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், 8 மாதங்கள் பூர்த்தியான கர்ப்பிணித் தாய்மார்கள் மாத்திரம் குறித்த பரிசோதனைகளுக்காக வருகை தருமாறும், ஏனையோர் தேவை ஏற்படும் பட்சத்தில் மாத்திரம் வருகை தருமாறும், சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இவர்களில், குறிப்பாக 8 மாதங்கள் பூர்த்தியாகாத கர்ப்பிணித் தாய்மார்களின் வீடுகளுக்குச் சென்று சுகாதார அதிகாரிகள் பரிசோதனைகளை நடத்தத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு குழந்தைகளுக்கு ஏற்றப்படும் ஊசியை ஏற்றாதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கர்ப்பிணித் தாய்மாருக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள அவசர வேண்டுகோள். கர்ப்பிணித் தாய்மாருக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள அவசர வேண்டுகோள். Reviewed by ADMIN on April 08, 2020 Rating: 5