யாழ் முஸ்லிம்களுக்கு உதவ முன்வந்த தொப்புள் கொடி உறவுகள்..


கொரோனா சூழ்நிலையில் யாழ் மாவட்டத்தில் முடங்கியுள்ள ஒரு தொகை முஸ்லிம்களுக்கு முற்போக்குவாதி தவம் ஞாபகார்த்த அறக்கட்டளை சார்பாக உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளது.

டென்மார்க்கில் வாழும் சத்தியதாஸ் தவராசா, தனது தந்தையின் ஞாபகார்த்தமாக குறித்த அறக்கட்டளையை ஆரம்பித்து நடாத்தி வருகின்ற அதேவேளை அவரது அறக்கட்டளையைச் சார்ந்த சேவையாளர்கள், யாழ் நண்பர்கள் வட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் சமூக சேவகர்கள் யாழ் பிரதேசத்தில் நிவாரண உதவிப் பணிகளை செய்து வருகின்றனர்.


இதில் ஒரு அங்கமாக தற்போதைய சூழ்நிலையில் சிரமங்களை எதிர்நோக்கி வரும் முஸ்லிம்களுக்கும் இவ்வுதவிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் பிரதேச முஸ்லிம்களும் உரிய நேரத்தில் கிடைத்த உதவிகளுக்காக தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். இன நல்லுறவை மேம்படுத்தும் இது போன்ற செயற்பாடுகள் பரவலாக இடம்பெறுவதை இக்கால கட்டத்தில் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


யாழ் முஸ்லிம்களுக்கு உதவ முன்வந்த தொப்புள் கொடி உறவுகள்.. யாழ் முஸ்லிம்களுக்கு உதவ முன்வந்த தொப்புள் கொடி உறவுகள்.. Reviewed by ADMIN on April 14, 2020 Rating: 5