தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம்..!நாடுமுழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள காவல்துறை ஊரடங்கு சட்டம், 19 மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது.
பின்னர், குறித்த மாவட்டங்களில் நாளை பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீள அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, கொரோனா அனர்த்த வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி முதலான மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.
தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம்..!   தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம்..! Reviewed by ADMIN on April 05, 2020 Rating: 5