கொரொனா தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டதன் எதிரொலி பொலநறுவையில் வைத்தியசாலையில் விடுதி ஒன்று மூடப்பட்டதுபொலன்னறுவை பொது வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குரிய அறிகுறிகளுடன் நோயாளி ஒருவர் சிகிச்சைப் பெறுவதால், குறித்த வைத்தியசாலையின் 10ஆம் இலக்க வார்ட் நேற்று (15) இரவு முதல் மூடப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நான்கு நாள்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இராணுவ வீரரான குறித்த நோயாளி, வெளிகந்த- சேனபுர புனர்வாழ்வு முகாமில் கடமையாற்றுபவரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த 10ஆம் இலக்க வார்டை மூடி, அங்கு கடமையாற்றிய 6 வைத்தியர்கள், 16 தாதியர்கள் உள்ளிட்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதகவும் பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் இந்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
கொரொனா தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டதன் எதிரொலி பொலநறுவையில் வைத்தியசாலையில் விடுதி ஒன்று மூடப்பட்டது கொரொனா தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டதன் எதிரொலி பொலநறுவையில் வைத்தியசாலையில் விடுதி ஒன்று மூடப்பட்டது Reviewed by ADMIN on April 16, 2020 Rating: 5