களுபோவில 'வார்ட்' மீளத் திறப்பு


கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளங்காணப்பட்டதன் பின்னணியில் இரு வாரங்களாக மூடி வைக்கப்பட்டிருந்த களுபோவில வைத்தியசாலையின் வார்ட் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அங்கு கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளங் காணப்பட்டிருந்ததன் பின்னணியில் குறித்த வார்டில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் தங்கியிருந்த நோயாளிகள் உட்பட அனைவரும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், தற்போது குறித்த வார்ட் மீள இயங்க ஆரம்பித்துள்ளதாக வைத்தியசாலை பணிண்பாளர் மருத்துவர் அசேல குணவர்தன விளக்கமளித்துள்ளார்.
களுபோவில 'வார்ட்' மீளத் திறப்பு களுபோவில 'வார்ட்' மீளத் திறப்பு Reviewed by ADMIN on April 15, 2020 Rating: 5