குவைத்திலிருந்து நாடு திரும்பிய பெண் மரணம் : இலங்கையில் 10வது கொரோனா மரணம்!இன்றைய தினம் திருகோணமலை முகாமிலிருந்து வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற வேளையில் மரணித்த பெண்ணுக்கு கொரோனா தொற்றிருந்ததாக பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இப்பின்னணியில், இலங்கையில் 10வது கொரோனா மரணம் இன்று பதிவாகியுள்ளது.

குவைத்திலிருந்து நாடு திரும்பியிருந்த குறித்த பெண், திருகோமலையில் இராணுவத்தினரால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் சுகயீனமுற்றிருந்த அதேவேளை ஏலவே அவரோடு நாடு திரும்பிய இருவர் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குவைத்திலிருந்து நாடு திரும்பிய பெண் மரணம் : இலங்கையில் 10வது கொரோனா மரணம்! குவைத்திலிருந்து நாடு திரும்பிய பெண் மரணம் : இலங்கையில் 10வது கொரோனா மரணம்! Reviewed by ADMIN on May 25, 2020 Rating: 5