48 மணி நேரத்தில் தாக்கப்பட்ட 30 முஸ்லிம் கிராமங்கள் : இன்றுடன் ஒருவருடம்.


வயம்ப என்று அழைக்கப்படும் வட மேல் மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு இன்றோடு ஒரு வருடம் ஆகிவிட்டது என Amnesty International எனும் சர்வதேச அமைப்பு தெரிவித்தது.

இதன்போது, அன்னளவாக 48 மணி நேரத்தில் 30 முஸ்லிம் கிராமங்களை மையப்படுத்தி பல தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பல கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டு, பலர் படுகாயங்கள் அடைந்து, வீடுகள் வாகனங்கள் தீவைக்கப்பட்டு, பள்ளிவாயல்களும் தீவைக்கப்பட்டது.

குர்ஆன்கள் எறிக்கப்பட்டு,நோன்பு நாள் என்பதால் கஞ்சி சட்டியில் சிறுநீர் கழிக்கப்பட்டு இருந்தது. மக்கள் வீடுகளை விட்டு காடுகளில் தஞ்சம் புகுந்து இருந்தனர்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை காரணம் காட்டி, ஹெட்டிபொல தொடக்கம் மினுவங்கொடை தொடக்கம் பல தாக்குதல்கள் ஊரடங்கு நேரத்திலும் நடந்தது. இதன்போது கொட்டரமுல்ல பிரதேசத்தில் பௌசுல் அமீர் என்பவர் இனவாதிகளின் வால்வெட்டுக்கு உள்ளாகி கொல்லப்பட்டமையும் முக்கிய விடயமாகும்.


48 மணி நேரத்தில் தாக்கப்பட்ட 30 முஸ்லிம் கிராமங்கள் : இன்றுடன் ஒருவருடம். 48 மணி நேரத்தில் தாக்கப்பட்ட 30 முஸ்லிம் கிராமங்கள் : இன்றுடன் ஒருவருடம். Reviewed by ADMIN on May 14, 2020 Rating: 5