தினசரி 9 மணித்தயாலங்களே ஊரடங்கு நீக்கம்: இதோ புதிய அறிவிப்பு.


இலங்கையில் கொரோனா அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் கொழும்பு ஹம்பகா மாவட்டங்கள் தவிர்ந்த 23 மாவட்டங்களில் நாளை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது.

கொழும்பு, ஹம்பகா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்கள் அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பு, ஹம்பகா மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும் எனவும்,புத்தளம், களுத்துறை மாவட்டங்கள் உள்ளடங்கலாக 23 மாவட்டங்களில் நாளை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் எனவும் அரசு அறிவித்திருக்கின்றது.

மேலும் நாளை இரவு 8 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் அடுத்த நாள் அதிகாலை 5 மணிக்கு மீள அமுலாகும். இவ்வாறே தினசரி 9 மணித்தியாலங்கள் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.
தினசரி 9 மணித்தயாலங்களே ஊரடங்கு நீக்கம்: இதோ புதிய அறிவிப்பு.  தினசரி 9 மணித்தயாலங்களே ஊரடங்கு நீக்கம்: இதோ புதிய அறிவிப்பு. Reviewed by ADMIN on May 10, 2020 Rating: 5