மருத்துவர் ஷாபி விவகாரம் : சர்ச்சையில் சிக்கிய சரத் வீரபண்டாரவுக்கு உடனடி இடமாற்றம்


மருத்துவர் ஷாபி விவகாரத்தில் சர்ச்சைகளைக் கிளப்பி சட்டத்துக்கு மேலாக அடாவடியாக நடந்து கொண்ட குருநாகல் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சரத் வீரபண்டார அங்கிருந்து அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரே அவரது செயற்பாடுகளுக்கு எதிராக சுகாதார அமைச்சிடம் முறையிட்டு வந்ததன் தொடர்ச்சியில் குறித்த நபர் சுகாதார அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குருநாகல் போதனா வைத்தியசாலையில் தன்னிச்சையான செயற்பாடுகளால் நிர்வாக சீர்கேட்டுக்கு அடித்தளமிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சரத்துக்கு எதிராக னைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து முறையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நபர், பொதுஜன பெரமுன ஊடாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவும் முயற்சி செய்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
மருத்துவர் ஷாபி விவகாரம் : சர்ச்சையில் சிக்கிய சரத் வீரபண்டாரவுக்கு உடனடி இடமாற்றம் மருத்துவர் ஷாபி விவகாரம் : சர்ச்சையில் சிக்கிய சரத் வீரபண்டாரவுக்கு உடனடி இடமாற்றம் Reviewed by ADMIN on May 08, 2020 Rating: 5