வெளியில் வந்து அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த கிம்


வட-கொரிய அதிபர் கிம் ஜங் உன் உயிரிழந்து விட்டதாக, அவரது தந்தையின் இறுதிச் சடங்கின் போதான காணொளியை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் அண்மையில் காட்டுத்தீ போல் செய்தி பரவி வந்தது.

இந்நிலையில், 20 தினங்களுக்குப் பின் தொழிற்சாலைத் திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டு தனது மரணம் பற்றிய வதந்திக்கு கிம் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இறுதியாக ஏப்ரல் மாதம் 12ம் திகதி, தொலைக்காட்சியூடாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்வொன்றில் காணப்பட்ட கிம் அதன் பின் வெளியில் காணப்படாததன் அடிப்படையில் அவர் இறந்து விட்டதாக வெகுவாக தகவல்கள் பரவி வந்ததுடன் அவர் இல்லாத வட-கொரியா பற்றிய ஆய்வுகளும் சர்வதேச ரீதியில் வெளியிடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
வெளியில் வந்து அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த கிம் வெளியில் வந்து அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த கிம் Reviewed by ADMIN on May 02, 2020 Rating: 5