அதிகபட்ச ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்குவோம் - இஷாக் ரஹுமான்- ஊடகப்பிரிவு

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச்செய்தி.

கொரோனா எனும் வைரஸ் முழு உலகையும் ஆட்டிப்படைத்து நிற்கும் இந்த வேளையில் இந்த புனித ரமழான் மாதத்தினை தராவீஹ் தொழுகைகள் இல்லாமலும், ஜூம்மா தொழுகைகள் இல்லாமலும், இறுதி பத்து இஹ்திகாப் இருப்பை இருக்க முடியாமலும் பாரிய தியாகத்தோடும் மன உளைச்சலோடும் கழித்து விட்டோம். நமது நாட்டு அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்தும், இந்த கொடிய நோயிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கும் நாம் செய்த இந்த தியாகத்தை புனித நோன்புப்பெருநாள் தினத்தன்று யாரும் வீணடித்து விடக்கூடியாது.


நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையினை கருத்திற்கொண்டும், எமது நாட்டு அரசாங்கத்தின் அறிவுரைகளை கருத்திற்கொண்டும் இந்த வருடத்திற்கான புனித நோன்பு பெருநாளை எமது வீடுகளிலேயே கொண்டாடி எமது நாட்டின் பாதுகாப்பிற்கும், நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கும் அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குவோம்.


உங்கள் அனைவருக்கும் இந்த புனித நோன்புப்பெருநாள் தினத்தன்று ஏக இறைவனின் திருப்பொருத்தம் கிடைப்பதற்காகவும், இந்த கொடிய நோயிலிருந்து முழு உலக மக்களையும் பாதுகாத்திடவும் அல்லாஹ்விடம் உளத்தூய்மையாய் பிரார்த்திகின்றேன்.


ஊடகப்பிரிவு

இஷாக் ரஹுமான்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் 

அனுராதபுரம்
அதிகபட்ச ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்குவோம் - இஷாக் ரஹுமான் அதிகபட்ச ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்குவோம் - இஷாக் ரஹுமான் Reviewed by ADMIN on May 24, 2020 Rating: 5